எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாட்டின் முதல் ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை, இந்திரஜால் ட்ரோன் டிபென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய இந்த வாகனத்துக்கு, இந்திரஜால் ரேஞ்சர் என பெயரிடப்பட்டு உள்ளது. வழக்கமாக, ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஓரிடத்தில் நிலையாக இருக்கும் நிலையில், இந்த ரேஞ்சர் வாகனம், அனைத்து இடங்களிலும் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.