மாநிலங்களின் வலிமை அதிகமானால் நாடு பாதிக்கப்படும் என்றும், மக்கள் மாநிலங்களை நாடி இருக்கமுடியாது எனவும் ஆளுநர் ஆர் என் ரவி பேசியுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது பெறுபவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், சமூகத்தில் வெளியே தெரியாமல் சிறந்த சேவை செய்பவர்களை மத்திய அரசு தேடி கண்டறிந்து பத்ம விருதுகளை வழங்குவதாக தெரிவித்தார்.