பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், 33 நிபந்தனைகளை விதித்த காவல்துறையினர்.அதில் 17 நிபந்தனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.இதுஒருபுறமிருக்க ஒப்பந்த அடிப்படையில் நிலம் கொடுத்த விவசாயிகள் விஜய் நடத்த உள்ள முதல் மாநாடு எங்கள் நிலத்தில் நடப்பது பெருமையாக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்..