திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், திருப்பதி கோவிலுக்கு நெய் வினியோகித்த உத்தரகாண்ட் நிறுவனத்தில் ஆந்திரா மற்றும் உத்தரகாண்ட் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ரூர்கி மாவட்டம் பகவான்பூரில் உள்ள இந்த நிறுவனம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு சுமார் 70 ஆயிரம் கிலோ நெய்யை வினியோகித்துள்ளது. அந்த நெய் கலப்பட நெய்யா என்ற கோணத்தில் சோதனை நடத்தி அங்கிருந்த பால், நெய் உள்ளிட்டவற்றின் மாதிரிகளை சேகரித்ததாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.