தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் கடலோர பகுதியான யூக்கிக்கில் உள்ள தேசிய நினைவு சின்னமான சான் பிரான்சிஸ்கோ தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிலி அரசாங்கத்தால் கடந்த 1994 ஆம் ஆண்டு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட சான் பிரான்சிஸ்கோ தேவாலயம் மரத்தால் ஆனது. இந்த தேவாலயத்தில் தீடிரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இருப்பினும் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் தேவாலயம் முழுவதும் தீக்கிரையானது. மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.