திருச்சி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் திருவரங்கத்தில் சித்திரை தேரோட்ட திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு சித்திரை தேரோட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அதிகாலையிலேயே மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் தங்க கொடிமரத்தில் எழுந்தருளிய பின்னர், வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.