முதலமைச்சர் திட்டம் அனைத்து தொகுதிகளிலும் எந்தவிதமான கட்சி பாகுபாடும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலமைச்சர் திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 ஆயிரத்து 466 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 253 பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.