கீழடி அகழ்வாய்வு மூலம் தமிழ் மொழி கி.மு 600க்கு முந்தைய மொழி என்று சொன்னால், அந்த உண்மையை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். எந்த ஒரு மொழியும் தமிழ்மொழியை அழுத்திவிட்டு உயர்ந்த மொழியாக உருவாகுமானால், அதற்கு அறிவியல் பூர்வமாக பதிலடி கொடுக்க கூடிய அரசாக தமிழ்நாடு அரசு இருக்கும் என்று கூறினார். எல்லை போராட்டம், மொழிப்போரில் உயிர் தியாகம் செய்தவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் கொடுத்த ஒரு அரசு இந்தியாவில் இருக்கும் என்றால் அது தமிழ்நாடு அரசுதான் என்று தெரிவித்தார். இதையும் படியுங்கள் : ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா... ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்