UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் சதவீதம் குறைந்திருப்பதற்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் காரணம் என்றும், மத்திய அரசு காரணமல்ல என காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்திலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். UPSC தேர்வில் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறும் சதவீதம் குறைந்ததற்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி, தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளை முன்னிறுத்தி, அரசுப் பள்ளிகளைச் செயலிழக்கச் செய்ததுதான் காரணம் என அவர் குற்றச்சாட்டினார்.