கனடா ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரர்கள் தொடர்ந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் விலகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.