மகாராஷ்டிரா மாநிலம் பட்லாபூரில் நர்சரி குழந்தைகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவு ஊழியர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். காவலர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து சுட்டுவிட்டு தப்ப முயன்றதால், பாதுகாப்புக்காக என்கவுன்ட்டர் செய்ததாக தானே காவல்துறை தெரிவித்துள்ளது.