மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி உயர்வுடன் இன்றைய வர்த்தகம் துவங்கியுள்ளது. ஜிஎஸ்டி மாற்றத்தால் உயர்வுடன் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமையன்று ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை, இன்று வியாழக்கிழமை செப்டம்பர் 4ஆம் தேதியன்று, உயர்வுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் இன்று காலை 81,456.67 புள்ளிகள் என்ற அளவில் தொடங்கியது. காலை 11.40க்கு சென்செக்ஸ் 395.05 புள்ளிகள் அதிகரித்து, 80,962.76 புள்ளிகளில் வர்த்தகமானது. காலையிலேயே சுமார் 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.40 புள்ளிகள் உயர்ந்து, 24,821 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.