பாஜகவின் கட்டமைப்பு அனைத்து வகையிலும் வலுவாக இருப்பதாக பாராட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஆனால் இந்தியா கூட்டணி இப்போதும் ஒற்றுமையாக இருக்கிறதா? என்பது தெரியவில்லை என கூறியுள்ளார். டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் நூலை வெளியிட்டு பேசிய அவர், இந்தியா கூட்டணி பலவீனமடைந்து வருவதை அறிகுறிகள் காட்டுவதாக தெரிவித்தார்.