மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை பாஜகவின் இளைஞர் அணியினர் சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸுக்கு எதிராக முழக்கமிட்ட பாஜகவின் இளைஞர் அணியான யுவமோர்ச்சா அமைப்பினர், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தினுள் நுழைந்து பொருட்களை சூறையாடியதாக கூறப்படுகிறது.