அதிகார மமதையில் மத்திய பாஜக கூட்டணி அரசு செயல்படுவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.கோவையில் அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி-யால் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற மற்றோர் வீடியோ வெளியானது.இந்நிலையில், தமது கண்டனத்தை பதிவிட்டுள்ள ஜெயக்குமார், நியாயமான கோரிக்கையை முன்வைத்த தொழிலதிபரை மிரட்டிய பாஜகவின் செயல் கீழத்தரமானது என்றும், பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.