NDTV குழுவிடம் உரையாடிய தவெக தலைவர் விஜய், பல்வேறு முக்கியமான கேள்விகளுக்கும் குறிப்பாக, கரூர் விவகாரம் பத்தியும் பேசியிருக்காரு. NDTVயின் chief ராகுல் கன்வால் நடத்திய இந்த உரையாடல், 45 நிமிடங்கள் சென்றிருக்கு. இந்த உரையாடல்ல என்ன என்ன விஷயங்கள் பேசப்பட்டுச்சுன்னு என்ன என்ன கேள்விகள் கேட்கப்பட்டுச்சு, அப்டின்றதா இந்த தொகுப்புல பார்க்கலாம்.கரூர் துயரம் துரத்துகிறதுமுதல்ல, கரூர் சம்பவம் தொடர்பா கேட்கப்பட்ட கேள்வில, கரூர்ல நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அதுக்கு நீங்க தாமதமா பதில் தெரிவிச்சதுக்கான காரணம் என்ன அப்டின்னு கேட்ருக்காங்க. விஜய் என்ன சொன்னார்?கரூர் சம்பவம், எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்துச்சு. இப்படியொரு சம்பவம் நடக்கும் அப்டின்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அது இன்னும் என்னை துரத்திட்டே தான் இருக்கு. நடந்த சம்பவத்தை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை மனதில் ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டுச்சு. எல்லாத்துக்கும் உடனடியாக நான் எதிர்வினை ஆற்றுவதில்லை. நான் என்ன அனுபவித்தேன் அப்டின்றதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியிருந்துச்சு, அப்டினு தெரிவிச்சுருக்காரு.மௌனம் என்பது இல்லாமை அல்ல அடுத்ததா, நெருக்கடி நேரங்களில் உங்களுடைய மௌனம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அப்டின்னு சிலர் சொல்றாங்க. அதுக்கு என்ன சொல்றீங்க அப்டின்னு கேட்டதுக்கு, நான் உடனடியாக பதில் சொல்லல, அப்டின்றதுனால நான் பேசல அப்டின்னு அர்த்தமில்லை. என் உரைகளின் மூலம் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். மௌனம் என்பது இல்லாமை அல்ல அப்டின்னு சொல்லிருக்காரு. இது ஒரு நீண்டகாலத் திட்டம்பல விமர்சனங்கள் வந்துட்டே தான் இருக்கு, அதாவது விஜய், தேர்தலுக்கு பிறகா சினிமா பயணத்தை தொடருவாரு அப்டின்னு, அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமா, ஒரு கேள்வி கேட்கப்பட்டுச்சு. அதுல, இது குறுகிய கால அரசியல் முயற்சியா, அல்லது நீண்ட பயணமா? அப்படின்ற கேள்வி முன்வைக்கப்பட்டுச்சு. அதற்கு, இது ஒரு நீண்டகாலத் திட்டம். இதைநான் சாதாரணமாக செய்யல, 33 வருஷம் சினிமாவுல இருந்ததை உணர்ந்து தான் விட்ருக்கேன். இது ஒரு எளிதான முடிவு இல்லை. ஆனால், நான் முடிவு செஞ்சுட்டேன். நீண்ட பயணத்திற்காகத் தான் அரசியலுக்கு வந்துருக்கேன் அப்டின்னு தெரிவிச்சுருக்காரு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர்அடுத்தபடியா, உங்கள ஊக்குவிக்கும் தலைவர்கள் அல்லது ஆளுமைகள் யாரு? அப்டின்னு கேட்டதுக்கு ஷாரூக்கானுடைய தெளிவான பேச்சும் கருத்துக்களை அழகா வெளிப்படுத்தும் திறனும் எனக்கு ரொம்ப புடிக்கும், அதை நான் எப்பவுமே கவனிச்சிருக்கேன். அதேமாதிரி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர், நெறைய அர்த்தமுள்ள சாதனைகளை செஞ்ச தலைவர்கள், அவுங்களையும் நான் முன்மாதிரியா பார்க்கிறேன், அப்டின்னு விஜய் தெரிவிச்சிருக்காரு. நான் முன்பே எதிர்பார்த்தேன்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் படம் தள்ளி போய்க்கொண்டே இருக்கக்கூடிய வேளையில, அது தொடர்பா கேள்வி ஒன்னு கேட்கப்பட்டுச்சு. அதுல ஜன நாயகன் படம் சிக்கலில் இருக்கு. அரசியல் உங்கள் சினிமா வாழ்க்கையை பாதித்ததா? அப்டின்னு கேட்டதுக்கு, என் அரசியல் நுழைவால் ஜனநாயகன் படம் பாதிக்கப்படுவது என் தயாரிப்பாளருக்காக எனக்கு வருத்தமாக இருக்கு. அரசியலில் இறங்கினால் சினிமா பாதிக்கப்படும் அப்டின்றதை, நான் முன்பே எதிர்பார்த்தேன். அதற்காக மனதளவில் தயார் நிலையிலையும் இருந்தேன் அப்டின்னு தெரிவிச்சிருக்காரு.மிகவும் தீவிரமாக சிந்திக்க ஆரம்பிச்சேன் சரி, அரசியலில் தீவிரமாக இறங்கணும் அப்டினு எப்போ முடிவு செஞ்சீங்க? அப்டின்னு கேட்டதுக்கு இது திடீர்னு எடுத்த முடிவு இல்லை. என் தந்தை அரசியல் இயக்குநராக இருந்தவர். அதனால இந்த உலகை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். கோவிட் காலத்திற்குப் பிறகு அரசியல் குறித்து நான் மிகவும் தீவிரமாக சிந்திக்க ஆரம்பிச்சேன் அப்டினு சொல்லிருக்காரு. எனக்கு எந்த குழப்பமும் இல்லைஅடுத்ததா, கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க தயக்கம் அல்லது தன்னம்பிக்கை குறைவு உங்களுக்கு இருப்பதாக சிலர் நினைக்குறாங்க, அதற்கு என்ன சொல்றீங்க? அப்டின்னு கேட்டதுக்கு, அது உண்மையில்லை என்று நினைக்கிறேன். இன்னைக்கு எல்லா வகையான கேள்விகளுக்கும் அமைதியாகவும் தெளிவாகவும் பதிலளிச்சிருக்கேன். நான் ஏன் இங்கே இருக்கிறேன்? அப்படிங்கிறதுல எனக்கு எந்த குழப்பமும் இல்லை. முடிவு எடுத்துட்டேன், சினிமாவை விட்டுட்டேன். இதுதான் என் எதிர்காலம், அப்டின்னு ரொம்ப உறுதியா பதிலளிச்சிருக்காரு. என் உரைகளின் மூலம்...இதுவரை, தேசிய ஊடகங்களுடன் நீங்கள் உரையாடவில்லை. இப்போது ஏன் அப்டின்னு கேட்டதுக்கு, ஆம், இது தேசிய ஊடகத்துடன் என்னோட முதல் உரையாடல். இதை ஒரு ‘mock interview’ மாதிரி எடுத்துக்குறேன். நான் போதுமான அளவு பேசவில்லை அப்டினு சிலர் நினைக்கலாம். ஆனால், என் உரைகளின் மூலம் நான் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன் அப்டின்னு சொல்லிருக்காரு. அரசியல்... மக்கள் பிரச்சினை...விஜய் அரசியலுக்கு வந்ததுல இருந்தே அவருடைய கொள்கைகள் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுச்சு, அதுல, நீங்க இடதுசாரியா, வலதுசாரியா, அல்லது மத்திய பாதையிலா? அப்டின்னு கேட்கப்பட்டதுக்கு நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, மத்தியமும் இல்லை. எனக்கு அரசியல் அப்டினா மக்களின் பிரச்சினைகள். அதுவே முக்கியம் அப்டின்னு தெரிவிச்சுருக்காரு. என் ரசிகர்கள் தான் என் கட்சியின்...பொதுவாவே ஒரு நடிகர் அரசியலுக்கு வரும்பொழுது, அந்த முதல் தடவ கூடுற கூட்டம் நீடிக்குமா? அப்படின்ற அந்த கேள்வி எல்லாருடய மனதிலும் இருந்துச்சு. உங்கள் ரசிகர் வட்டம் அரசியல் சக்தியாக மாறும் என்று நம்புகிறீர்களா? அப்டின்னு விஜயிடம் கேட்டபொழுது, என் ரசிகர்கள் தான் என் கட்சியின் களப்பணியாளர்களாக மாறுவார்கள். இது ஒரு இயக்கத்தை உருவாக்குவது பற்றியது, அப்டினு கூறியிருக்குறாரு. நான் வெல்ல வந்திருக்கிறேன்இறுதியாக, தமிழ்நாடு அரசியலில் ‘கிங் மேக்கர்’ ஆக விரும்புகிறீர்களா? அப்டின்னு கேட்டதுக்கு விஜய்... இல்லை, அந்த கேள்வியே எனக்கு ஆச்சரியமாக இருந்துச்சு. நான் கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? கூட்டத்தை பார்த்தீர்களா? நான் வெல்ல வந்திருக்கிறேன். அறிக்கை வெளியிட அல்ல, இந்தத் தேர்தலை வெல்லவே நான் போராடுகிறேன், அப்டின்னு சொல்லிருக்காரு விஜய்... Related Link Sunday பட்ஜெட்... 27 ஆண்டுகளுக்கு பிறகு...