மேற்கு வங்க சட்டப்பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாலியல் பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான தொழில்நுட்ப அறிக்கையை முதலமைச்சர் மமதா பானர்ஜி தமக்கு அளிக்கவில்லை என ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை தமது ஒப்புதலுக்காக அனுப்பும் போது, அவை தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை அனுப்பாமல் இருக்கும் விஷமத்தனத்தை மமதா அரசு தொடர்ந்து கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.அபர்ஜிதா மசோதா என்ற பெயரில் இந்த பாலியல் பலாத்கார தடுப்பு மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தனித்துவம் எதுவும் இல்லை எனவும், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சலில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அப்படியே காப்பி அடித்து மமதா அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளதாக ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.