திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிறக் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் தங்க கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை சமர்ப்பணம் செய்தார்.