ஹிந்தியில ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதன் பின்னர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பெரிய வரவேற்பை கெடச்சிருக்கு. அதேநிலையில சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் சேதுபதியின் தொகுப்பில் தொடங்கப்பட்ட நிலையில அதே நாளில் ஹிந்தியில பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் நடிகர் சல்மான் கானின் தொகுப்பில தொடங்கப்பட்டுச்சு. இந்த நிகழ்ச்சியில தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமான நடிகையும் , குக்வித் கோமாளி டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா அர்ஜூன் கலந்துகிட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஸ்ருதிகா நிகழ்ச்சியில ஹிந்தி பேசிட்ருக்கும்போது திடீரென தமிழில் பேச அந்த ஷோ வோட பிக்பாஸ் ஸ்ருதிகாவிடம் என்ன நடக்கிறது என ஜாலியாக பேசியிருக்கும் வீடியோ இணையதளத்துல வெளியாகி வைரலாகிட்டு இருக்கு.