ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை செலுத்தும் விதமாக இந்த ஏவுதளம் அமையவுள்ளது. சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 48 மாதங்களில் ஏவுதளத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.