ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பஞ்சாப் மகாராஜா யாதவிந்த்ரா சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இரு அணிகளுமே தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுமே வெற்றி பெற முனைப்பு காட்டி களமிறங்குகிறது.