விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லாததால், நிச்சயம் அவர் 2-வது ஓடிஐ போட்டியில் விளையாடுவார் என நினைப்பதாக இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். பயிற்சியின் போது வலதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி விளையாட முடியாமல் போனது.