கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த கன்னங்குளத்தில் புனித உபகார மாதா ஆலயத்தின் 173 ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட கொடி பட்டம், சபை பெரியோர்கள் முன்னிலையில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.