தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 8 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 3 ஆயிரத்து 326 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 44 ஆயிரத்து 236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.