இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நலம் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் சாய்ரா பானு அறிக்கை விடுத்துள்ளார்.