சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கேப்டன் ரோகித் சர்மா நன்றி தெரிவித்துக் கொண்டார். இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதற்கு பின் பேசிய அவர், தங்களுடைய ஆட்டத்தை பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும் என நம்புவதாக கூறினார். மேலும் எதிரணியின் பலம் என்ன என்பதை அறிந்து சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்பட்டதாக கூறிய அவர், கே.எல். ராகுல் மற்றும் வருண் சக்ரவர்த்தியை குறிப்பிட்டு தனித்தனியாக பாராட்டினார்.