தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து தெலுங்கு மொழியிலும் பிறந்தநாள் வாழ்த்து கூறிய சகோதரி தமிழிசைக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்படும் எனில், எந்த மொழியையும் கற்கலாம் என்பதற்கு, தமிழிசை தெலுங்கு கற்றதே எடுத்துக்காட்டு என்றும் முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.