Also Watch
Read this
தளபதி 69 படம் இப்படித்தான் இருக்கும்!... உண்மையை உடைத்தார்.. இயக்குனர் H.வினோத்தின் நண்பர்..
தளபதி 69 படம் இப்படித்தான் இருக்கும்!
Updated: Sep 28, 2024 01:43 PM
விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னாடி வெளியிட்டாங்க.
விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் தான் இயக்க இருக்காரு.
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கி பிரபலமான எச்.வினோத் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினாரு.
எச்.வினோத்தின் படங்களில் சமூகம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் இருக்கும்.
மேலும் விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவராகவும் இருப்பதால் கண்டிப்பாக எச்.வினோத் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 69 ஒரு புரட்சிகரமான படமாக இருக்கும் அப்டிணு சொல்லப்பட்டுச்சு.
இந்நிலையில எச்.வினோத்தின் நண்பரும் சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனருமான சரவணன் தளபதி 69 படத்தை பற்றி பேசியிருக்காரு.
விஜய்யை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு வந்ததையும் அவர் மிகவும் சாதாரணமாக தான் சொன்னாரு.
தளபதி 69 படம் பக்காவான கமர்ஷியல் படமா இருக்கும்ணு சரவணன் சொல்ல்லீருக்காரு.