டெஸ்ட் போட்டிக்கு இடையே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது குடும்ப பிரச்னை காரணமாக ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வரும் நிலையில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்தியாவுக்கு அவசரமாக திரும்பினார். Adelaideல் நடைபெறும் இரண்டாவது போட்டிக்கு இந்திய அணி தயராகி வரும் நிலையில் அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.