அடுத்த மாதம் இந்தியாவில் தனது முதலாவது விற்பனை நிலையத்தை திறக்க உள்ளதாக டெஸ்லா மின் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் சீனாவில் டெஸ்லாவின் விற்பனை சரிந்து வரும் நிலையில் அதை ஈடுகட்டுவதற்காக இந்தியாவில் தனது விற்பனை நிலையத்தை திறக்க டெஸ்லா அதிபர் எலான்மஸ்க் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் தயாராகும் ஒய் மாடல் ரியர் வீல் டிரைவ் எஸ்யுவி கள் இந்தியாவில் முதற்கட்டமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.இந்தியாவில் முதற்கட்டமாக மும்பையிலும் அதைத் தொடர்ந்து டெல்லியிலும் டெஸ்லா விற்பனை நிலையங்கள் திறக்கப்படும், சூப்பர்சார்ஜர் உதிரிபாகங்கள் மற்றும் கார் அலங்கார பொருட்களை அமெரிக்கா,சீனா மற்றும் நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யவும் டெஸ்லா முடிவு செய்துள்ளது.இதையும் படியுங்கள் : முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்த குபேரா?