உலகில் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தனது இரண்டாவது ஷோரூமை இந்தியாவில் திறக்கவுள்ளது. மும்பையில் முதல் ஷோரூமை திறந்ததையடுத்து டெல்லியில் உள்ள ஏரோசிட்டி என்ற பகுதியில் இரண்டாவது டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளது. வரும் 11ஆம் தேதி ஷோரூம் திறப்பு விழா நடைபெறுகிறது.