மின்சார கார்களுக்கு சார்ஜ் போடும் நேரத்தில் உணவருந்தும் வகையில், டெஸ்லா டைனர் எனும் புதிய அம்சத்தை, முதற்கட்டமாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் கார் ஸ்கிரீனில் தேவையான உணவை ஆர்டர் செய்து விட்டால், சார்ஜிங் பாயிண்டுக்கு வந்ததும் காருக்கே உணவு டெலிவரி செய்யப்படும். அல்லது உணவகத்திற்குள் சென்றும் சாப்பிடலாம்.