தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலும் சீர்குலைந்து இருப்பதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலைப்பகுதியில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியவர், இரும்புக் கரத்தை இப்போதாவது முதல்வர் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.