குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ சிறிது நேரத்திலேயே கொளுந்து விட்டு எரிந்த நிலையில், 3 தீயணைப்புத்துறை வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.