திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த தெப்பல் உற்சவம் நிறைவு பெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தெப்ப திருவிழாவின் இறுதி நாளன்று, உற்சவர் மலையப்பசுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்குளத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிகள் வலம் வந்தனர்.