பாகிஸ்தானில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் அரசியல் தலைவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின் நவ்ஷேரா மாவட்டத்தில் தருல் உலூம் ஹக்கானியா மதர்சாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஜமியத் உலமா-இ-இஸ்லாம் சமி என்ற அரசியல் கட்சியின் தலைவர் மவுலானா ஹமிதுல் ஹக் உட்பட 6 பேர் கொல்லப்பட்டார்.