பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் 2 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால் பதற்றம் தீவிரமாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் இந்தியா தாக்க கூடும் என அச்சத்தில் உள்ள பாகிஸ்தான், எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணியை முடுக்கிவிட்டுள்ளது. இதனிடையே தனது கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள், இரு மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த 10 நாட்களுக்கு மசூதிகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.