தென்காசியில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவில் செல்லும் சாலை அருகே திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இருசக்கர வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பைக்கை மீட்டனர். அப்பகுதியில் மூன்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்... கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேள்வி நடத்த அனுமதி கோரிய வழக்கு