தமிழ்நாட்டில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அநேக இடங்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் குறைந்த பட்ச வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் அசெளகரியம் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.