தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தந்தை ராஜகோபால் ராஜு காலமானார். 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான ராஜகோபால் ராஜு, ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும், ரவி தேஜாவின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.