தொலைத்தொடர்புத்துறை மோசடிப் பேர்வழிகள் என சந்தேகிக்கப்படும் 2 ஆயிரத்து 876 சீனர்களை, மியான்மர் அரசாங்கம் நாடு கடத்தியது. தொலைத்தொடர்புத் துறை மோசடியை தடுக்க சீனா, மியான்மர், தாய்லாந்து நாடுகளின் கூட்டு நடவடிக்கை குழு மேற்கொண்ட சோதனைகளின் போது, சீனாவை சேர்ந்த இந்த மோசடிப் பேர் வழிகள் பிடிபட்டனர்.