நாடாளுமன்ற தொகுதி வரையறை மூலம் தென்மாநிலங்களை பழிவாங்க பாஜக துடிப்பதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், தென்னிந்தியாவில் கால்பதிக்க முடியாத பாஜக, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை நிர்ணயம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளதாக விமர்சித்தார்.