ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து நியூயார்க் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், 282 பயணிகள் 31 மணி நேரம் கடும் அவதி அடைந்தனர். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள போர்த்துகீசிய தீவுகளில் உள்ள லாஜஸ் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் மறுநாள் பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.