நவம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், அன்றைய தினம் கிறிஸ்தவ மக்கள் வழிபடும் கல்லறைத் திருநாள் என்பதால், தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்திருந்திருந்தனர். இதையடுத்து, தேர்வு தேதி மாற்றப்பட்டு நவம்பர் 15, 16-ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.