அசாம் மாநிலத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேயிலை தோட்ட பணியாளர்கள் பேரணி சென்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பழங்குடியின மக்கள் தேயிலை தோட்ட பணிக்காக அசாம் அழைத்து வரப்பட்டனர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தேயிலை தோட்டப் பணி செய்யும் தங்களுக்கு ஊதிய உயர்வு கோரியும், நில உரிமை கோரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டின்சுகியாவில்(Tinsukia) பேரணியாக சென்று முழக்கங்களை எழுப்பினர்.