கனடா, மெக்சிகோ, சீனா நாடுகளுக்கு வரி விதிக்கும் அமெரிக்காவின் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட சில நாடுகள் மீது வரிவிதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடா மீது 25 சதவீதமும், மெக்சிகோ மீது 25 சதவீதமும் தனித்தனியாக வரிவிதிக்கப்பட்டுள்ளது.