தவெக தலைவர் விஜய், கரூர் மாவட்டத்திற்கு வர உள்ளது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்களிடம் கூறி இருப்பதாவது:த.வெ.க. தலைவர் விஜய், கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம். இன்று (அக்டோபர்-8) நேரில் சென்று அனுமதி கோர இருக்கிறோம். விஜய் உடன் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சந்திப்பு விரைவில் நடைபெறும். இவ்வாறு அருண்ராஜ் கூறி உள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு, தமிழக டிஜிபிக்கு தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மின்னஞ்சல் வழியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில்,இன்று டிஜிபியை நேரில் சென்று சந்தித்து கடிதம் அளிக்க இருப்பதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.