இந்தியாவின் மின்சார வாகன விற்பனையில் முன்னணி வகிக்கும் டாடா நிறுவனம், 2027ம் ஆண்டுக்குள், நாட்டிலுள்ள ஈவி சார்ஜிங் மையங்களை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மின்சார வாகனங்கள் சார்ஜ் இல்லாமல் பாதி வழியில் நின்றுவிட்டால் என்ன செய்வது என தயங்கும் மக்களுக்கு, பிரச்சினை இல்லாத சூழலை உருவாக்க முடியும் என டாடா நம்பிக்கை தெரிவித்துள்ளது.