பிரபல கார் மாடலான சியராவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதில் முதற்கட்டமாக சியரா எலெக்ட்ரிக் மாடலும், அதன்பிறகு ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும் எனவும் இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் பாதியில் விற்பனைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.