நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 44,810 கார்களை டாடா விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பரில் 41,065 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. இதனால் கார் விற்பனையில் 3வது இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.